லண்டனில் இறந்து இரண்டு ஆண்டுகளாக அழுகி துர்நாற்றம் வீசிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
தெற்கு லண்டன்- Peckham பகுதியில், செயின்ட் மேரி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த 2019 அக்டோபரில் கட்டிடத்தில் ‘துர்நாற்றம்’ இருப்பதாக அக்கம்பக்கத்தினர் ஹவுசிங் அசோசியேஷன் வீட்டு உரிமையாளரிடம் புகார் செய்யத் தொடங்கினர்.
ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், அந்த துர்நாற்றம் பல நாட்களாக நீடித்து வந்துள்ளது. எதுவரை என்றால், இரு தினங்களுக்கு முன் அங்கு ஒரு வீட்டிலிருந்து அழுகிய நிலையில் எலும்புக்கூடாக ஒரு பெண்ணின் சடலத்தை பொலிஸார் கண்டெடுக்கும் வரை, கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக நீடித்தது.
கடந்த வெள்ளிகிழமை, அந்த வீட்டின் தபால் பேட்டி நிரம்பி வழிந்திருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், சந்தேகத்தின்பேரில் லண்டன் மெட் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
கதவைத் தட்டிப் பார்த்துவிட்டு, உட்புறம் பூட்டப்பட்ட நிலையில் பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று சோதனை செய்தனர். அப்போது அழுகிய நிலையில் கிடந்த ஒரு சடலத்தை அவர்கள் கண்டெடுத்தனர்.
பின்னர் விசாரணையில், அந்த வீட்டில் வசித்துவந்த 61 வயது பெண்ணின் சடலம் தான் அது என்பது உறுதிசெய்யப்பட்டது. எலும்புக்கூடாக இருந் அந்த சடலத்தை பொலிஸார் கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பிவைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர், ‘நான் செப்டம்பர் அல்லது அக்டோபர் 2019 இல் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பி வந்தேன், கட்டிடத்தில் ஒரு பயங்கரமான துர்நாற்றம் இருப்பதைக் கண்டேன். அது மிகவும் மோசமாக இருந்தது, நான் கதவின் கீழ் ஒரு துண்டு போட வேண்டியிருந்தது.
அது விசித்திரமாக இருந்ததால் நாங்கள் பலமுறை வீட்டுவசதி சங்கத்தை அழைத்தோம் – அவளுடைய கடிதப் பெட்டி நிரம்பியிருந்தது, அவள் வாடகை செலுத்தாத கடிதங்களிலிருந்து நான் பார்த்தேன். நான் அவர்களை மீண்டும் அழைத்து, இந்த பெண்ணை பல மாதங்களாக நான் பார்க்கவில்லை என்றேன்.
பொலிஸார் வந்தனர் ஆனால் தொற்றுநோய்களின் போது நிறைய பேர் லண்டனை விட்டு வெளியேறிவிட்டார்கள், அவரம் வெளிநாட்டில் இருக்கலாம் என்று சொன்னார்கள்.
சிறிது நாட்கள் கழித்து, ஒரு பைக் அவரது வீட்டு வாசலில் கைவிடப்பட்டது மற்றும் அதை அகற்றவில்லை என்று அக்கம் பக்கத்தினர் புகார் கூறினர்.
கடைசியாக இந்த வாரம் பொலிஸார் கதவை உடைத்து இறந்த பெண்ணை கண்டுபிடித்தனர், என்கிறார்.
‘பெண்ணின் மரணம் சந்தேகத்திற்கு இடமில்லாததாக கருதப்பட்டாலும், விளக்கமளிக்கப்படவில்லை. பிரேத பரிசோதனைக்காக கோப்பு தயார் செய்யப்படும்’ என்று பொலிஸார் கூறினர்.