விசாகப்பட்டினம் – கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை ஜனாதிபதி இன்று பார்வையிடுகிறார்

விசாகப்பட்டணம்:
விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, விசாகப்பட்டினத்தில் நடத்தப்படும் கடற்படை கப்பல்களின் அணிவகுப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பார்வையிகிறார்.
இதற்காக விசாகப்பட்டினம் வந்துள்ள ஜனாதிபதியை ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, கவர்னர் ஹரிசரண், கிழக்கு பிராந்திய கட்டளை அதிகாரி பிஸ்வஜித் தாஸ்குப்தா மற்றும் கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர். 
இந்த அணிவகுப்பில் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் 60-க்கும்  மேற்பட்ட  கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள்,  பங்கேற்கின்றன. மேலும், இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 போர் விமானங்கள் வானில் பறந்து சாகசங்களை நிகழ்த்துகின்றன.
அந்தமான் மற்றும் நிகோபாரில் உள்ள கடற்படைக் கட்டுப்பாட்டு மையத்தின் போர்க்கப்பல்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றன. 
இந்த அணிவகுப்பில் பங்கேற்கும் 60 கப்பல்களில், 47 கப்பல்கள், இந்தியாவில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.