விஜய்யின் சிவப்பு காருக்கு இன்சூரன்ஸ் இல்லையா ? இதெல்லாம் எப்படி கண்டுபுடிக்கிறாங்க?கிளம்பியது அடுத்த சர்ச்சை..!

நடிகர்
விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவரின் ரசிகர் பலத்தைப்பற்றி தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவே அறியும். மேலும் தன் ஒவ்வொரு படங்களின் மூலமும் புதுப்புது வசூல் சாதனையை செய்து வரும் விஜய்யின் அடுத்த படமாக
பீஸ்ட்
விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து பாடல் செம வைரலாக போய்க்கொண்டிருக்கும் இந்த நிலையில் அதைவிட விஜய் நேற்று வாக்களிக்க வந்த விஷயம் வைரலாகிவருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரும் பேசும்பொருளாக மாறியது. விஜய் நாட்டிலுள்ள பெட்ரோல் விலை உயர்வை கண்டித்துதான் சைக்கிளில் வந்தார் என ஒரு சர்ச்சை கிளம்பியது.

ரஜினிக்கு திடிர்னு என்ன ஆச்சு..அவசரமாக அமெரிக்கா சென்ற ரஜினி.பதட்டத்தில் ரசிகர்கள்..!

மேலும் அவர் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்ததும் குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்கிறார் என்றும் பேசப்பட்டன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் சிவப்பு காரில் கருப்பு நிற மாஸ்க்கை அணிந்து வாக்களித்தார்.

இம்முறையும் விஜய் குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்கிறார் என்ற பேச்சுக்கள் பரவத்துவங்கின. இதைத்தொடர்ந்து தற்போது மேலும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது நேற்று விஜய் வந்த சிவப்பு காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என்ற தகவல் சமூகத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

விஜய் ஓட்டிவந்த சிவப்பு நிற
மாருதி
காரின் இன்சூரன்ஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்ததாம். எனவே இன்சூரன்ஸை புதுப்பிக்காத காரை விஜய் ஓட்டிவந்துள்ளார் என சமூகத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

மேலும் விஜய்யின் பெயரில் உள்ள அந்த காரின் இன்சூரன்ஸை புதுப்பிக்காது சாலையில் ஓட்டுவது சட்டப்படி குற்றமென்றும், அதற்காக அபராதம் விதிக்கப்படும் என்றும் சிலர் பேசிவருகின்றனர். எனவே விஜய்யை போன்ற பிரபல நடிகர்கள் எதை செய்தாலும் அதில் ஒரு சர்ச்சையை கண்டுபிடிப்பதே சிலரின் முழுநேர வேலையாக உள்ளது என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்கர் ராஜு வெற்றி விழாவில் பாடி அசத்திய அனூப் ரூபன்ஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.