தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒருமித்த கருத்துகளை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவர் ஆகியோரை சந்தித்து பேசினார்.
ஹைதராபாத்தில் இருந்து மும்பை சென்ற தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், நேரடியாக உத்தவ் தாக்கரேவின் இல்லத்திற்கு சென்று தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தார்.
அண்மையில், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே, மும்பைக்கு வரும்படி சந்திரசேகர ராவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் மும்பை சென்ற அவர், பாஜகவுக்கு எதிராக ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகளை ஒன்று திரட்டுவது தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. பிறகு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் கேசிஆர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து நல்ல செய்தி வரும் என கேசிஆர் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM