Dhanush:கமலுக்கு ஒரு அம்ரிதா, தனுஷுக்கு கவிதா: சூப்பர் பெண்மணிகள்

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில்
தனுஷ்
நடித்த அத்ரங்கி ரே படம் டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியானது. அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தனுஷ் அணிந்திருந்த உடைகள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

அந்த ஸ்டைலான உடைகளுக்கு காரணம் காஸ்ட்யூம் டிசைனர்
கவிதா ஸ்ரீராம்
. தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிய முடிவு செய்துவிட்டபோதிலும் அத்ரங்கி ரே பட ப்ரொமோஷன் முடியட்டும் என்று காத்திருந்தார்கள்.

View this post on Instagram A post shared by Kavya Sriram (@kavyasriraam)
அந்த சங்கடமான நேரத்தில் தனுஷ் ஸ்டைலாக இருக்க கவிதா தான் காரணம். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும்
மாறன்
படத்திலும் வேலை செய்திருக்கிறார் கவிதா.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் படத்திலும் கவிதா தான் ஸ்டைலிஸ்ட். இது தவிர்த்து வெங்கி அட்லுரி இயக்கி வரும் வாத்தி படத்திலும் தனுஷுக்கு கவிதா தான் ஸ்டைலிஸ்டாக இருக்கிறார்.

கவிதா மீது நம்பிக்கை வைத்திருப்பதால் அவருக்கு தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பு அளித்து வருகிறார் தனுஷ். அந்த நம்பிக்கையை காப்பாற்றி வருகிறார் கவிதா.

தனுஷ் விஷயத்தில் பயந்தது மாதிரியே நடந்துடுச்சே!
உலக நாயகன் கமல் ஹாசன் ஸ்டைலாக இருக்க அவரின் காஸ்டியூம் டிசைனர் அம்ரிதா ராம் காரணம். அதே போன்று ஸ்டைலிஷ் தனுஷுக்கு பின்னால் இருப்பது கவிதா ஸ்ரீராம்.

கோலிவுட்டின் இரண்டு முக்கிய பிரபலங்களின் ஸ்டைலான உடைகளுக்கு காரணமாக இருப்பது இரண்டு சூப்பர் பெண்மணிகள் ஆவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.