Unique experiment: சூப்பர் ஐடியா! நீர் சேமிப்பு + மின்சார உற்பத்தி = சோலார் பேனல்கள்

Unique experiment: கால்வாய்களில் சோலார் பேனல்களை வைத்து, 63 பில்லியன் கேலன் தண்ணீர் சேமிப்பதுடன், 13 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூப்பர் திட்டம்…

4,000 மைல்கள் (6437 கிமீ) அளவிற்கு கால்வாய்களின் இரண்டு பக்கங்களிலும் சோலார் பேனல்கள் வைக்கப்பட்டு இந்த அற்புதமான இயற்கையை மேம்படுத்தி, நவீன வசதிகளை பெறும் திட்டம் கலிபோர்னியாவில் செயல்படுத்தப்படுகிறது.

நெவாடா மலைகள் மற்றும் கலிபோர்னியாவின் வடக்குப் பகுதிகளிலிருந்து மாகாணத்தின் பிற பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்லும் கால்வாய்களின் இருபுறமும் சூரியசக்தி பேனல்கள் வைக்கப்பட்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  

20 லட்சம் மக்களுக்கு தேவையான தண்ணீர் சேமிக்கப்படும் என்பதோடு, நீரின் தரமும் மேம்படும் என்பது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம்.

மேலும் படிக்க | நீரில் இருந்து உயரும் நிலம்! சும்மா அதிருது
  
தண்ணீரைச் சேமித்து மின்சாரம் தயாரிக்கும் பிரம்மாண்டமான திட்டத்தை கலிபோர்னியா செயல்படுத்திவருகிறது.  

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டர்லாக் நகரைச் சேர்ந்த டர்லாக் இரிகேஷன் டிஸ்டிரிக்ட் (urlock Irrigation District) ஒரு வரையறுக்கப்பட்ட கருத்தாக்க சோதனைக்கு $20 மில்லியன் மானியத்தை வழங்கியது. 

நீர் ஆவியாவது தடுக்கப்படுகிறது  
இந்த கால்வாய்கள் மேலே இருந்து மூடப்படுவதால், சூரிய வெப்பத்தில் தண்ணீர் ஆவியாவது தடுக்கப்படுகிறது. தண்ணீர் பிரச்சனையால் தவிக்கும் கலிபோர்னியாவுக்கு இதுவொரு வரப்பிரசாதத் திட்டம். 

மொடெஸ்டோவிற்கு அருகிலுள்ள ஸ்டானிஸ்லாஸ் கவுண்டியில் உள்ள பகுதிகளை உள்ளடக்கும் இந்தத் திட்டம், நீர் ஆவியாவதை தடுப்பதோடு, 100,000 வீடுகளுக்கு போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

மேலும் படிக்க | ஸ்வஸ்திக் சின்னத்தை தடை செய்ய கனடா முயல்வதற்கு காரணம் என்ன?

இது அனைத்து 4,000 மைல் கால்வாய்களிலும் நீட்டிக்கப்பட்டால், ஆண்டுக்கு 63 பில்லியன் கேலன் தண்ணீரைச் சேமிக்க முடியும், இது இரண்டு மில்லியன் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது, மேலும் 13 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.  

சோலார் பேனல்களை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் தண்ணீர் உதவுகிறது, இது அவற்றைப் பாதுகாக்கும், மேலும் சூரிய ஒளியைச் சேகரித்து மின்சாரமாக மாற்றுவதில் அவற்றின் திறனையும் அதிகரிக்கும்.

இந்தத் திட்டத்தின் பிரதான இலக்குகள்
1. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது
2. நீரின் தரத்தை மேம்படுத்துவது
3. கால்வாய்களில் தாவர வளர்ச்சியைக் குறைப்பது
4. கால்வாய்களில் செல்லும் நீர் ஆவியாவதைக் குறைப்பது
5. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் ஆற்றல் சேமிப்பு ஆகியவற்றுக்கு அடித்தளம் அமைப்பது

மேலும் படிக்க | இனி ‘நரகத்தின் கதவு’ யாருக்காகவும் திறக்காது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.