அன்புச்செழியன் மகள்- அமைச்சர் உறவினர் மகன் திருமணம்: குவிந்த கோலிவுட் சூப்பர் ஸ்டார்கள்

திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன் மகள் மற்றும் திமுக அமைச்சர் உறவினரின் மகன் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், நகைச்சுவை நடிகர் சேந்தில், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட கோலிவுட் நட்சத்திர நடிகர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

பிரபல சினிமா பைனான்ஸியர், வினியோகஸ்தர், சினிமா தயாரிப்பாளர் அன்புச்செழியன் மகள் திருமணம் மகள் சுஷ்மிதாவுக்கும் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் மகனும் சன் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநருமான சரணுக்கும் இன்று திருவான்மியூரில் உள்ள (பிப்ரவரி 21) ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் திருமணம் நடைபெற்றது.

ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் தங்கம் அமைச்சர் தென்னரசுவுக்கு உறவினர். சினிமா பைனான்ஸியர் அன்புச்செழியன் தனது மகளின் திருமணத்துக்காக ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, டிடிவி தினகரன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் என பலருக்கும் நேரில் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுத்திருந்தார்.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் மகள் சுஷ்மிதா, உளவியல் பட்டப்படிப்பு முடித்து, பிறகு எம்.பி.ஏ படித்தார். 25 வயதாகும் சுஷ்மிதா 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நிர்வகித்து வருகிறார்.

அன்புச்செழியனின் மகள் திருமணம் இன்று திருவான்மியூரில் உள்ள (பிப்ரவரி 21) ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் நடைபெற்றது. இவர்களின் திருமண நிகழ்ச்சியில், கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களும் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

பைனான்சியர் அன்புச்செழியன் மகள் சுஷ்மிதா சன் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.-ன் மகன் சரண் திருமணத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, நடிகர் நாசர், நகைச்சுவை நடிகர் சேந்தில், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட கோலிவுட் நட்சத்திர நடிகர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

அதே போல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர் உதயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். சினிமா தயாரிப்பாளர் அன்புச்செழியன் மகள் திருமணத்தில் வாழ்த்த கோலிவுட் சூப்பர் ஸ்டார்கள் குவிந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.