பல ஆண்டுகளாக இலவச சேவைகளை வழங்கிவரும் டெக் ஜாம்பவான்கள், விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டி வந்தனர். ஆனால், தரவு பாதுகாப்பில் ஏற்பட்ட கேள்விக்குறி காரணமாக தனியுரிமை பாதுகாப்பில் நிறுவனங்கள் அதீத கவனம் செலுத்தி வேண்டியிருந்தது. பயனர்களின் ஆன்லைன் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த சில புதிய யுத்திகளை கையாள வேண்டியதாக இருந்தது. குறிப்பாக பேஸ்புக், ஆப்பிள், கூகுள் மற்றும் அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும், வணிக லாபம் நோக்கத்தினால் நம்பிக்கையற்ற நிலைமையை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆப்பிள் மற்றும் கூகுள் தங்களது பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாக்கப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. இதை பயனர் தனியுரிமையை மேம்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகக் கருதப்படலாம் அல்லது நிறுவனங்களின் நிலையை மேலும் உறுதிப்படுத்துவதாகவும் கருதலாம்.
ஆப்பிள் ஆப் டிராக்கிங் டிரான்ஸ்பரன்சி
கடந்தாண்டு, ஐபோன்கள் மற்றும் ஐபேட்களில் ஆப் டிராக்கிங் டிரான்ஸ்பரன்சி (ATT) அம்சத்தை ஆப்பிள் அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் மூலம், இணையம் மற்றும் பிற செயலிகளில் பயனரின் செயல்பாட்டை கண்காணிக்க அனுமதி பெற வேண்டும்.
ஐபோன் பயனர்களின் தரவுகளை சேகரிக்கும் கதவை ஆப்பிள் மூடியது, பயனர்களின் தேடுதலை இலக்காக வைத்து விளம்பரம் செய்யும் நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. ஆப்பிளின் நடவடிக்கையின் தாக்கம் 2022 ஆம் ஆண்டிற்கான “10 பில்லியன் டாலர் வரிசையில்” இருக்கும் என்று பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.
கூகுள் பிரைவசி சாண்ட்பாக்ஸ்
ஆண்ட்ராய்டு பிரைவசி சாண்ட்பாக்ஸ் அம்சம் செயல்பாட்டுக்கு வர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம். கூகுள் ஏற்கனவே இதனை இணையத்தில் உருவாக்கி வருகிறது.
நிறுவனத்தின் கூற்றுப்படி, இணையத்திற்கான பிரைவசி சாண்ட்பாக்ஸ் மூன்றாம் தரப்பு குக்கீகளை தடுத்து ரகசிய கண்காணிப்பை கட்டுப்படுத்துகிறது. குக்கீ என்பது ஒரு பயனர் வலைத்தளத்தைப் பார்வையிடும்போது பிரவுசரில் சேமிக்கப்படும் ஒரு சிறிய தரவு. பல தளங்களை பார்வையிடும் போது மூன்றாம் தரப்பு குக்கீகள் சேமிக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, நீங்கள் செய்தித் தளத்தைப் பார்வையிடும்போது ஒரு விளம்பரத் தளம் குக்கீயைச் சேமிக்கக்கூடும். முதல் தரப்பு குக்கீகள் இணையதளம் மூலமாகவே சேமிக்கப்படும்.
மெட்டாவுக்கு என்ன பாதிப்பு?
தி நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, ஆப்ஸ் டிராக்கிங்கிலிருந்து விலகுவதற்கு பயனர்களுக்கு விருப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பேஸ்புக் உள்ளிட்ட முக்கிய சமூக ஊடகங்களில் ஆப் டிராக்கிங் அம்சத்தை பயன்படுத்தினால், ஆன்லைன் விளம்பரங்களை நம்பியிருக்கும் நிறுவனங்கள் பாதிப்படையும்.
ஈ-காமர்ஸ், சேர்ச் இன்ஜின், பிற சமூக ஊடக செயலி செயல்பாடு போன்ற ஆன்லைன் தரவுகளிலிருந்து குறைவான அளவிலே டேட்டா கிடைக்கும் பட்சத்தில், விளம்பரங்களை பயனாளர்களை டார்கெட் செய்து விநியோகிப்பது கடினமாகிவிடும். இதனால் விளம்பரதாரர்கள் குறைவான விளம்பரங்களை இயக்க முடியும்.
ஆண்ட்ராய்டில் வரவுள்ள பிரைவசி சாண்ட்பாக்ஸ், ஆண்ட்ராய்டு சாதனங்களின் உலகளாவிய சந்தைப் பங்கைப் பொறுத்தவரை, மெட்டாவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். தற்சமயம், இணையத்தில் அதனை அறிமுகப்படுத்தினாலும் மெட்டாவுக்கு சிக்கல் தான்.
கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்கள், சர்ச் என்ஜின் அல்லது ஈ-காமர்ஸ் தளம் மூலம் முதல் தரவை உருவாக்கின்றனர். ஆனால், Google, Amazon போலல்லாமல், தரவுகளை உருவாக்க பயனர்களின் மூன்றாம் தரப்பு செயல்பாட்டைக் கண்காணிப்பதையே Facebook சார்ந்திருக்க வேண்டும். எனவே, இது பேஸ்புக்கிறது மிகவும் மோசமான செய்தி ஆகும்.
தீர்வு என்ன?
பிரைவசி சாண்ட்பாக்ஸ் குக்கீகளை படிப்படியாக நீக்குவதாகும். ஆன்லைன் விளம்பரதாரர்களின் பயனர் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்கான தொழில்நுட்பம் ஆகும். குக்கீகளுக்கு பதிலாக FLoC (Federated Learning of Cohorts) அறிமுகப்படுத்த கூகுள் முன்மொழிந்தது. இதன் மூலம், விளம்பரங்களுக்காக குக்கீகள் இயக்கப்படுவதாக இல்லாமல், பயனர்கள் ஒப்பிடக்கூடிய ஆர்வங்களைக் கொண்ட குழுக்களாகத் தொகுக்கப்படுவார்கள் என்பதே பொருள்.
பயனர்களின் ஆன்லைன் செயல்பாட்டைக் கண்காணிப்பதை முற்றிலுமாக நிறுத்துவதற்குப் பதிலாக, FLoC கண்காணிப்பை நேரடியாக கூகுளின் கைகளில் வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த முடிவு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நம்பிக்கையற்ற விசாரணைகளையும் சந்தித்தது.
கூகிள் FLoC திட்டத்தில் Topic என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், கூகுளின் குரோம் பிரவுசரில் பயனரின் ஒரு வார செயல்பாட்டை கண்காணித்து பயனரின் முக்கிய ஆர்வங்களை கண்டறியும்.
FLoC மற்றும் தலைப்புகளுக்கு இடையேயான ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், இனம், மதம், பாலியல் நோக்குநிலை போன்ற உணர்வுப்பூர்வமான வகைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவதிலிருக்கு விலக்கு கிடைக்கிறது.
மூன்றாம் தரப்பு பயன்பாடுகளால் பயனர்கள் தங்கள் தரவைச் சேகரிப்பதை தடுப்பது கூகுளின் நோக்கமாக இருந்தாலும், கூகுள் சர்ச், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், ஜிபே, யூடியூப் போன்ற பயன்பாடுகள் மூலம் பயனர் தரவை கண்காணிக்கும்.
கூடுதலாக, ஆப்ஸ் மூலம் கண்காணிப்பதைக் கட்டுப்படுத்தும் ஆப்பிளின் நடவடிக்கை, ஆன்லைன் விளம்பரத்தைப் பொறுத்த வரையில் கூகுளுக்கு கூகுளுக்கு ஆதரவாக அளவுகோல்களை உயர்த்தியுள்ளது. ஆப்பிள் போலல்லாமல் ஆன்லைன் விளம்பரம் என்பது கூகுளின் முக்கிய வணிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையின்படி, ஆப்பிள் தனது தனியுரிமை கொள்கையை கடந்தாண்டு அறிமுகப்படுத்தியதில் இருந்து, வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கு மெட்டாவின் தளங்களான Facebook மற்றும் Instagram இல் சிறு நிறுவனங்கள் விளம்பரம் செய்வது அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.