இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது தாயாரான ராணி
இரண்டாம் எலிசபெத்
வசிக்கும் வின்ட்சர் பகுதியில் அவரை சந்தித்து விட்டு திரும்பினார். அடுத்த 2 நாட்களில் இளவரசர் சார்லசுக்கு
கொரோனா
பாதிப்பு உறுதியானது.
எனினும், ராணி எலிசபெத் கொரோனா பரிசோதனை செய்து கொண்டாரா என்பது பற்றிய தகவல் எதுவும் வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில்,
இங்கிலாந்து ராணி
இரண்டாம் எலிசபெத் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை உறுதி படுத்தியுள்ளது.
அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுவதாகவும், மருத்துவர்கள் அறிவுரைப்படி ராணி இரண்டாம் எலிசபெத் வின்ட்சர் அரண்மனையில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணி எலிசபெத் இரண்டு டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருந்த நிலையில், அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து ராணி எலிசபெத் விரைவில் குணமடைய வேண்டும் என்று உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவிவித்து வருகின்றனர். அந்த வகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து ராணி எலிசபெத் விரைவில் குணமடைய
பிரதமர் மோடி
வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் விரைவில் குணமடையவும், பூரண நலம்பெற வேண்டும் எனவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.