புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,051 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றின் காரணமாக 206 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது:
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,051 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4,28,28,524.
* கடந்த 24 மணி நேரத்தில் 37,901 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை:4,21,24,284
* கடந்த 24 மணி நேரத்தில் 206 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,12,109.
* இதுவரை நாடு முழுவதும் 175.46 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 2,02,131 என்றளவில் உள்ளது.
ஹாங்காங்கில் கரோனா நெருக்கடி: உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒமைக்ரான் பரவல் குறைந்து வரும் நிலையில் ஹாங்காங்கில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹாங்காங் சுகாதார துறை அறிவுறுத்தலின்படி, கரோனா தொற்று லேசான அறிகுறிகளுடன் இருந்தால் கூட அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது கட்டாயம். இந்நிலையில் அங்கு மருத்துவமனைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
12,000 பேர் மருத்துவமனையில் அனுமதி பெறுவதற்கு விண்ணப்பித்துக் காத்துள்ளனர். இந்நிலையில் ஒமைக்ரான் நோய் பாதிப்பு டெல்டாவை ஒப்பிடும்போது குறைவு என்பதால், இனி ஹாங்காங்கில் கரோனாவால் பாதிக்கப்படுவோருக்கென புதிய ஹோம் குவாரன்டைன் விதிகள் வகுக்கப்பட்டு விரைவில் அமலுக்குக் கொண்டு வரப்படும் என அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், பூஸ்டர் டோஸ்கள் செலுத்துவதைத் துரிதப்படுத்தியிருந்தால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்று சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.