விசாகப்பட்டினம்:
விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின ஒரு பகுதியாக கடற்படை மதிப்பாய்வு நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இதற்காக விசாகப்பட்டினம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, ஆளுநர் ஹரிசரண், கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளை அதிகாரி பிஸ்வஜித் தாஸ்குப்தா மற்றும் கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர்.
#WATCH | The 12th edition of President’s Fleet Review underway in Visakhapatnam as part of Azadi Ka Amrit Mahotsav pic.twitter.com/vKSGeEcZ6F
— ANI (@ANI) February 21, 2022
கடற்படை தளத்தில் 21-துப்பாக்கி முழங்க கடற்படை சார்பில் குடியரசுத் தலைவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கடலோர காவல்படையின் கண்காணிப்பு கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ராவில் பயணம் செய்த குடியரசுத் தலைவர்,
கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள,60 க்கும் மேற்பட்ட கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 55 விமானங்களைக் கொண்ட இந்திய கடற்படையை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கும் பங்கேற்றார்.