இமயமலை சாமியார் ஒரு முன்னாள் நிதியமைச்சக அதிகாரி.. என்எஸ்ஈ சித்ரா வழக்கில் புதிய திருப்பம்..!

முதலீட்டு சந்தைக்கும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் தினசரி அதிர்ச்சி கொடுக்கும் விஷயமாக மாறியுள்ளது என்எஸ்ஈ சித்ரா ராமகிருஷ்ணா வழக்கு, ஒருபக்கம் மத்திய அரசு அனைத்து அரசு அமைப்புகளும் இந்த வழக்கில் ஈடுப்பட அனுமதி அளித்துள்ள நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் சோதனை செய்து, தற்போது ஆனந்த் சுப்ரமணியன் மற்றும் இதர முக்கிய அதிகாரிகளையும் தேடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா வெறும் ஈமெயில் மூலம் கட்டுப்படுத்த தனக்குச் சாதகமான விஷயங்களைச் செய்துகொண்ட இமயமலை – சென்னை சாமியார் யார் என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

ரூ.50,000 கோடி ஐபிஎல் திட்டம்.. அடித்துக்கொள்ளும் ரிலையன்ஸ், அமேசான்..!

ஆனந்த் சுப்ரமணியன்

ஆனந்த் சுப்ரமணியன்

என்எஸ்ஈ மற்றும் EY செய்த ஆய்வில் ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்தச் சாமியாராக இருக்க வேண்டும் என்பதை ஆனந்த் சுப்ரமணியனின் என்எஸ்ஈ கம்பியூட்டரில் “anand.subramanian9” மற்றும் “sironmani.10” என்ற இரு ஸ்கைப் ஐடி இருந்துள்ளதாகவும், இந்த ஸ்கைப் முகவரி [email protected] மற்றும் ஆனந்த் சுப்ரமணியனின் மொபைல் எண் உடன் இணைக்கப்பட்டு உள்ளதை அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய நிதியமைச்சக உயர் அதிகாரி

மத்திய நிதியமைச்சக உயர் அதிகாரி

தற்போது இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் அடிப்படையில் சித்ரா ராமகிருஷ்ணனிடம் பேசியது சாமியாரும் இல்லை, இமயமலைக்கும் இதற்கு எந்தத் தொடர்பும் இல்லை, அவர் கட்டாயம் மத்திய நிதியமைச்சகத்தின் முன்னாள் உயர் அதிகாரியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடு
 

வெளிநாடு

இந்த முன்னாள் மத்திய நிதியமைச்சகத்தின் அதிகாரி கேப்பிடல் மார்கெட் சந்தையைச் சீர்படுத்தும் பணியில் இருந்திருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது, இதேவேளையில் இவர் கட்டாயம் இந்தியாவில் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

சித்ரா ராமகிருஷ்ணன்

சித்ரா ராமகிருஷ்ணன்

மேலும் இவர் சித்ரா ராமகிருஷ்ணன் எல்எஸ்ஈ அமைப்பில் உயர் பதவியை அடையப் பெரிய அளவில் உதவி செய்துள்ளார் என்றும், மேலும் என்எஸ்ஈ-ஐ நிர்வாகம் செய்வதில் பெரிய அளவில் உதவி செய்துள்ளது, 20 வருட மின்னஞசல் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் இருந்து தெரிகிறது என இந்த வழக்கு மற்றும் விசாரணைகள் குறித்து நன்கு அறிந்த நபர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

என்எஸ்ஈ தரவுகள்

என்எஸ்ஈ தரவுகள்

ஆனால் இந்த வழக்கை விசாரிக்கும் பலர் இந்தச் சாமியார் ஆனந்த் சுப்ரமணியன் தான் என்பதை உறுதி செய்து வழக்கை முடிக்க முயற்சிகள் நடப்பதாகவும், அவர் கூறியுள்ளார். அப்படி ஆனந்த் சுப்ரமணியன் தான் இமயமலை சாமியார் என்றால் சித்ரா ராமகிருஷ்ணன் என்எஸ்ஈ தரவுகள் வெளியாட்களுக்குப் பகிர்ந்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்டு உள்ள குற்றஞ்சாட்டு முழுமையாக மறைந்துவிடும் எனவும் கூறியுள்ளார்.

செபி அமைப்பு

செபி அமைப்பு

இந்நிலையில் செபி அமைப்பு என்எஸ்ஈ நிர்வாகக் குழுவையும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் சிபிஓ நுழைந்தால் வெறும் அபராதத்துடன் வழக்கு முடியும், ஆனால் இந்த முகம் தெரியாத சாமியார் யார் என்றே தெரியாமல் போய்விடும் எனவும் பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

NSE Chitra Ramkrishna linked Himalayan baba might be former Finance Ministry bureaucrat

NSE Chitra Ramkrishna linked Himalayan baba might be former Finance Ministry bureaucrat இமயமலை சாமியார் ஒரு முன்னாள் நிதியமைச்சக அதிகாரி.. என்எஸ்ஈ சித்ரா வழக்கில் புதிய திருப்பம்..!

Story first published: Monday, February 21, 2022, 12:39 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.