உக்ரைனில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து இந்திய மக்களுக்கு அந்நாட்டு தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் தெரிவித்து வரும் நிலையில், இந்திய மக்கள் வெளியேற தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் தற்காலிகமாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளதுடன், உக்ரைனில் தங்குயிருப்பது கட்டாயமில்லை என கருதும் நபர்கள் வெளியேறலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கேற்ப உக்ரைனுக்கான இந்திய தூதரகத்தின் டுவிட்டர், முகநூல் பக்கங்களில் தகவல்களை அறிந்து கொள்ளலாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்திய குடிமக்கள் கிடைக்க கூடிய ஏதேனும் ஒரு விமானத்தில் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என டுவிட்டர் வழியே உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும், இந்திய மாணவர்கள், உக்ரைனுக்கு தங்களை அழைத்து சென்றவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும்படியும், இந்திய தூதரகத்தின் பேஸ்புக், வலைதளம் மற்றும் டுவிட்டரை தொடர்ந்து பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.