மாஸ்கோ: உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி மாகாணங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுக்கும் நோக்கத்துடன், அதன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை, ரஷ்யா நிறுத்தி உள்ளது. இதற்கு, அமெரிக்காவும், இதர ஐரோப்பிய நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனுக்கு சொந்தமான டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய கிழக்கு மாகாணங்களில் ரஷ்ய ஆதரவு தலைவர்கள் தங்கள் மாகாணங்களை சுதந்திர நாடுகளாக அங்கீரிக்குமாறு விளாடிமிர் புடினை சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். கோரிக்கைகளை தீவிரமாக பரிசீலிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.
இந்த சூழலில் ரஷ்ய அதிபர் புடின், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை சுதந்திர நாடாக அங்கீகரித்தார்.
இது தொடர்பாக கிரம்ளின் மாளிகையில் அவர் கூறியது,தற்போது உக்ரைன் நிர்வாகம் மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கிழக்கு உக்ரைன் விவகாரத்தில் சில கடினமான முடிவுகளை அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.
புடினின் இந்த தனிச்சையான முடிவுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரான், ஜெர்மன் அதிபர் ஸ்கோல்ஸ், ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உக்ரை விவகாரம்: பைடன் அவசர ஆலோசனை
உக்ரைன் விவகாரத்தில் கிழக்கு உக்ரைனின் இருமாகாஙண்களை சுதந்திர நாடாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்,அங்கீகரித்தார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோபைடன், தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை அவசரமாக கூட்டி ஆலோசித்தார். இதில் உக்ரைன்- ரஷ்யா விவகாரத்தில் தற்போது ஏற்பட்டு சூழல், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
Advertisement