உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்காமல் இருந்தால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேசுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, உக்ரைன் மீது படையெடுக்கும் அளவுக்கு எல்லைக்கு அருகிலேயே ரஷ்யப் படைகள் நிலைகொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ரஷ்யா தனது படைகளை உக்ரைனை நோக்கி அனுப்பாமல் இருந்தால், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் ஆகியோரின் சந்திப்பு வரும் வியாழனன்று ஐரோப்பாவில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
உக்ரைன், ரஷ்யா இடையிலான தகராறைத் தீர்க்கப் பேச்சு நடத்த அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் ஜென் சாகி தெரிவித்தார்.