உக்ரைன் விவகாரம்: புடினை சந்திக்க ஓகே சொன்ன ஜோ பைடன்!

அமெரிக்கா
தலைமையிலான நேட்டோ அமைப்பில் ரஷ்யாவைன் அண்டை நாடான உக்ரைனை சேர்ப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு
ரஷ்யா
தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனது படைகளை ரஷ்யா குவித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

அதன் தொடர்சியாக, நேட்டோ படைகள் கிழக்கு உக்ரைனில் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்தது. மேலும் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர்
ஜோ பைடன்
பகிரங்க எச்சரிக்கைகளை விடுத்தார், ஆனால், உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என்று தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

இதனிடையே, ரஷ்ய படைகள் சிலவற்றை பாசறைக்கு திரும்புமாறு அந்நாட்டு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது. இதனால், போர் பதற்றம் தணிந்த நிலையில், எல்லையில் ரஷ்ய படைகள் இன்னும் இருப்பதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா, அவை திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தியது. மேலும், உக்ரைன் மீது இன்னும் சில நாட்களில் படையெக்க வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இங்கிலாந்து ராணிக்கு கொரோனா – தனிமையில் இருப்பதாக தகவல்!

இந்த நிலையில், முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுக்கு அழைப்பு விடுத்தார். நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதை முன்மொழிவதாகவும், அதற்கான இடத்தை ரஷ்யாவே தேர்வு செய்யட்டும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக,
உக்ரைன் விவகாரம்
தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினை நேரில் சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த சந்திப்பு நிகழ வேண்டுமானால், உக்ரைன் மீது போரை தவிர்க்க ரஷ்யா ஒப்புக்கொள்ள வேண்டும். இதனை விடுத்து, போரை தொடங்கினால் கடுமையான பினவிளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரிடும். அமெரிக்கா எப்போதும் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளது எனவும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லேவ்ரோவ் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் பிளிங்கன் ஆகியோர் இந்த வாரம் ஐரோப்பா செல்ல உள்ளனர். அதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.