உக்ரைன் விவகாரம்: பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் சம்மதம்

நியூயார்க்:
உக்ரைன் – ரஷியா இடையேயான பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மேக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன்  தொலைபேசி மூலம் தனித்தனியாக விவாதித்தார். ரஷியா படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கை குறித்து இரு தலைவர்களுடன் அவர் பேசினார்
உக்ரைன் சூழலால் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்கா, ரஷியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் அப்போது கேட்டுக் கொண்டார்.  இதை ஜே பைடனும், விளாடிமிர் புதினும் ஏற்றுக் கொண்டதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை செயலாளர் ஜென்சாகி தெரிவித்துள்ளார். 
இதையடுத்து பிப்ரவரி 24 அன்று அமெரிக்கா, ரஷியா அதிபர்கள் சந்திக்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த அறிக்கைகைளை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் தயாரிக்க வேண்டும் வெள்ளை மாளிகை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ரஷியா உக்ரைன் மீது படையெடுக்காது என்ற நிபந்தனையுடன் மட்டுமே இந்த மாநாட்டை நடத்த முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.