என்னை வாழ விடுங்கள்; கடத்தல் ஸ்வப்னா கெஞ்சல்| Dinamalar

திருவனந்தபுரம்-”என்னை வாழ விடுங்கள்,” என, தங்கக் கடத்தல்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.திருவனந்தபுரத்தில் உள்ள யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தில் அதிகாரியாக இருந்தவர் ஸ்வப்னா சுரேஷ், 40. கடந்த, 2020ல் எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 16 மாத சிறை வாசத்துக்குப் பின் சமீபத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.வேலை இல்லாமல் இருந்த ஸ்வப்னாவுக்கு, பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில், 45 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் கடந்த வாரம் பணி வழங்கப்பட்டது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, அந்த நிறுவனம்ஸ்வப்னாவின் பணி நியமன உத்தரவை ரத்து செய்தது.

latest tamil news

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம்ஸ்வப்னா நேற்று கூறியதாவது:என்னை வாழ விடுங்கள். என் குழந்தைகள் மற்றும் வயதான என் தாயாரை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில், மாதம் 45 ரூபாய் சம்பளம் என்பது எனக்கு மிகவும் குறைவான வருமானம்தான்.என்னை துன்புறுத்தாதீர்கள்.

முதலில் என்னைப் பற்றி அவதூறாக புத்தகம் வெளியிடப்பட்டது. இப்போது நான் செல்லும் இடங்களில் எல்லாம் துரத்தியடிக்கும் வேலையை செய்கின்றனர். நான் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து என்னை வாழ விடுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.