இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வருகிறது.
இதில், மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டு டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இன்று இ3வது டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொலார்ட் பௌலிங் தேர்வு செய்தார்.
இதனையடுத்து, இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருத்ராஜ் 4 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதனைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் உடன் ஸ்ரேயாஸ் அய்யர் கைகோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில், இஷன் கிஷன் 34 ரன்னுக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 25 இரண்டு அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அவர்களை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர், சூர்யகுமார் யாதவ் உடன் கைகோர்த்த வெங்கடேஷ் ஜோடி, கடந்த ஆட்டம் போலவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
இதில், சூரியகுமார் யாதவ் 31 பந்துகளில் 7 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 65 ரன்களை எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். வெங்கடேச ஐயர் 19 பந்துகளில் 2 சிக்ஸர் 4 பவுண்டரி உட்பட 35 ரன்களை குவித்தார்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 184 ரன்களை சேர்த்துள்ளது. இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.
ஏற்கனவே ஒரு நாள் தொடரில் ஒயிட் வாஷ் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த டி20 தொடரில் ஒயிட் வாஸ் ஆகாமல் இருப்பதற்காக முழு திறமையையும் காட்டி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.