புதுச்சேரி : ஆரோவில் சர்வதேச நகரில், அன்னை பிறந்த நாளில் துக்கத்தை வெளிப்படுத்துவதாக, ஆரோவில் குடியிருப்பாளர்களில் ஒரு பிரிவினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் ஆரோவில் சர்வதேச நகர் அமைந்துள்ளது.
இந்நகரை அமைத்த அன்னை, பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 1878 பிப்., 21ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் மிர்ரா அன்போன்ஸா.அன்னையின் பிறந்த நாளையொட்டி, ஆரோவில் சர்வதேச நகர் முழுதும் நேற்று வண்ண விளக்குகளால் விழாக்கோலம் பூண்டது. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடந்தன.அதே வேளையில், ஆரோவில்வாசிகளில் ஒரு பிரிவினர், அன்னை பிறந்த நாளில் துக்கத்தை வெளிப்படுத்துவதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி, ஆதங்கத்தையும், மனக்குமுறலையும் வெளிப்படுத்தினர்.
இந்த போஸ்டர், மாத்ரி மந்திர் உள்பட முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. ஆரோவில்லில் ‘கிரவுன் சாலை’ திட்டத்திற்காக 2021 டிச., 4ம் தேதி மரங்கள் வெட்டப்பட்டதால், துக்கத்தில் உள்ளதாக சித்தரித்து, இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.இந்த போஸ்டரால் ஆரோவில்லில் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement