சென்னை கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் இயங்கி வந்த மயிலாப்பூர் கிளப் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் புதிதாக நிர்ணயம் செய்த வாடகையை எதிர்த்து, மயிலாப்பூர் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்குத் தொடரப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 3 ஆம் தேதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி மயிலாப்பூர் கிளப் நிறுவனம் சார்பில் வாடகை நிலுவைத் தொகையில் ஒரு பகுதியாக ஒரு கோடிக்கான காசோலை கோயில் தக்காரிடம் வழங்கப்பட்டது.
எனினும் இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதி வரை வாடகை நிலுவையாக 4 கோடியே 7 லட்சத்து 86 ஆயிரத்து 731 ரூபாய் செலுத்தாத காரணத்தினால் மயிலாப்பூர் கிளப் பூட்டி சீலிடப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM