காய்கறிகள் வரத்து அதிகரிப்பு : கோயம்பேட்டில் கடும் விலை சரிவு

சென்னை

காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் கோயம்பேடு அங்காடியில் விலை மிகவும் குறைந்துள்ளது.

தினமும் 450 முதல் 500 லாரிகளில் கோயம்பேடு அங்காடிக்குக் காய்கறிகள் வருவது வழக்கம். தற்போது இது அதிகரித்து இன்று காலை 600 வாகனங்களில் காய்கறிகள் வந்து குவிந்தன. இதனால் கோயம்பேடு அங்காடியில் காய்கறிகளின் விலைகள் மிகவும் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்ற நவீன தக்காளி இன்று விலை 15 ரூபாய்க்கு விற்றது. மேலும் 20 ரூபாய்க்கு விற்ற நாட்டுத் தக்காளி 10 ரூபாய்.  வெங்காயம் 20, சின்ன வெங்காயம் 80 ரூபாயில் இருந்து 50, ஐதராபாத் கேரட் 50 ரூபாயில் இருந்து 25க்கும் முள்ளங்கி 20 யில் இருந்து 5 க்கும் பீன்ஸ் 30 ல் இருந்து 10க்கும் சுரக்காய் 15ல் இருந்து 7க்கும் விற்பனை ஆகிறது.

தவிர முட்டைகோஸ் 40 ல் இருந்து 15க்கும் பாகற்காய் 30 ல் இருந்து 20க்கும் சவ் சவ் 15 ல் இருந்து 6க்கும் வெண்டைக்காய் 60 ல் இருந்து 30க்கும் வரி கத்திரிக்காய் 30 ல் இருந்து 15க்கும் உஜாலா கத்திரிக்காய் 50 ல் இருந்து 20க்கும் உருளைக்கிழங்கு 20 ல் இருந்து 14 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.