திருவனந்தபுரம்: கேரள அரசுப் பேருந்துகளில் செல்போன் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தி சத்தமாக பாடல்களை இசைக்கவும் பயணத்தின் போது சத்தமாகப் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கேரளாவில் அரசு பேருந்துகளில் சத்தமாக பேசவும், செல்போனில் சத்தமாக பாட்டு கேட்கவும் தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு பேருந்துகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள அரசுப் பேருந்துகளில் செல்போன்களில் சத்தமாக பாட்டிசைக்கப்படுகிறது. பயணிகள் சத்தமாக செல்போனில் பேசுகின்றனர். அவர்களின் உரையாடல்கள் சில நேரங்களில் கடுமையாக இருக்கலாம்.
இது மாதிரியான செயல்கள் சக பயணிகளுக்கு தொந்தரவாக அமைகிறது. எனவே பயணிகள் அனைவரும் இனிமையான, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மாநில போக்குவரத்துக் கழகத்தில் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.