ஷிவமொகா : சண்டையை விலக்கி விட சென்ற இரண்டு நண்பர்களை, நண்பர்களே கொலை செய்த அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷிவமொகாவின் சூளேபைலு கிராமத்தை சேர்ந்தவர்கள் சலீம், 22, அப்துல், 23. இவர்களின் நண்பர் திப்பு, 22. நேற்று முன் தினம் நள்ளிரவு, ஏதோ காரணத்தால் திப்பு, தன் வீட்டில் சண்டை போட்டார். இதையறிந்து அங்கு சென்ற நண்பர்கள் இருவரும் புத்திமதி கூறி, சண்டையை விலக்கி விட முயற்சித்தனார்.
தன் வீட்டு விஷயத்தில், இவர்கள் தலையிட்டதால் கோபமடைந்த திப்பு, தன் மற்ற நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, இருவரையும் ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து கொலை தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றவர்களை தேடுகின்றனர். துங்காநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஷிவமொகா : சண்டையை விலக்கி விட சென்ற இரண்டு நண்பர்களை, நண்பர்களே கொலை செய்த அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஷிவமொகாவின் சூளேபைலு கிராமத்தை சேர்ந்தவர்கள் சலீம், 22, அப்துல், 23.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.