12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசியான கோர்பேவேக்ஸின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 180 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல, 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, 12 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு செலுத்துவதற்காக ‘கோர்பேவேக்ஸ்’ என்ற கரோனா தடுப்பூசியை பயாலாஜிக்கல் – இ நிறுவனம் தயாரித்திருந்தது. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உயிரியல் தடுப்பூசியான கோர்பேவேக்ஸ், சோதனைக்காக இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு, கோர்பேவேக்ஸ் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இன்று அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால், நாட்டில் விரைவில் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM