சீன மோசடியாளர்களிடம் ரூ1,059 கோடி பணத்தை மக்கள் பறிகொடுத்தனர்| Dinamalar

சிங்கப்பூர்-சிங்கப்பூரில், சீனாவைச் சேர்ந்த, ‘கிரிப்டோ’ மோசடியாளர்களிடம் சிக்கி, 1,059 கோடி ரூபாய் பணத்தை, மக்கள் பறிகொடுத்துள்ளனர்.

தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், ‘ஆன்லைன்’ வாயிலாக நடக்கும் பண மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், சமீப காலமாக சீனாவில் இருந்து உருவான, ‘பிக்பட்செரிங்’ என்ற, ‘கிரிப்டோகரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணயம் மூலம் பண மோசடி சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன.இதில் முதலீடுகளை செய்ய, மக்களை மோசடியாளர்கள் துாண்டுகின்றனர். அவர்கள் கூறும் கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி, அதிக பணத்தை முதலீடு செய்து, மக்கள் ஏமாந்து வருகின்றனர்.

இந்த மோசடியில் சிக்கி, கடந்த ஆண்டு மட்டும் 1,059 கோடி ரூபாய் அளவுக்கு, மக்கள் பணத்தை பறிகொடுத்துள்ளனர். இது, 2019ல் பண மோசடி செய்யப்பட்ட தொகையைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாகும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.