சென்னையில் காப்பீட்டுத் தொழிலாளர் தேசிய மாநாடு- மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் துவக்கி வைத்தார்

சென்னை:
எல்.ஐ.சி. நிறுவனத்தில் இயங்கிவரும் காப்பீட்டுத் தொழிலாளர்களின் தேசிய அமைப்பின் (NOIW) பதினெட்டாவது அகில இந்திய மாநாடு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த இரண்டு  தின மாநாட்டை, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் ஜல் சக்தி துறை இணை மந்திரி பிரகலாத் சிங் படேல் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினரான ஶ்ரீ ராமகிருஷ்ண ஆஷ்ரமத்தை சேர்ந்த சுவாமி சத்யபிரபானந்தா உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் காப்பீட்டுத் தொழிலாளர்களின் தேசிய அமைப்பின் அகில இந்திய தலைவர் அதுல் தேஷ்பாண்டே, பொதுச் செயலாளர் எம்.ஏ.பாபட், அமைப்பாளர் டி.என். ராமசுப்பிரமணியன், இணை அமைப்பாளர் எல்.ஜி.கிருஷ்ணன் மற்றும் 700க்கும் மேற்பட்ட எல்.ஐ.சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். 
எல்ஐசி நிறுவனம் மற்றும் நிறுவன ஊழியர்களின் நலனை காப்பதற்காக நடைபெறும் இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகள் நாளை மாலை வரை நடைபெறும்.
தேச நலனை கருத்தில் கொண்டு இயங்கிவரும் உண்மையான ஊழியர் சங்கம் NOIW என்று புகழ்ந்த மத்திய மந்திரி, எல்ஐசி நிறுவனத்தின் பாதுகாப்பையும், பாலிசிதாரர்களின் நலனையும் மத்திய அரசு உறுதிப்படுத்தும் என்றும், எல்.ஐ.சி ஊழியர்களின் நலனை ஒருபொழுதும் விட்டுக் கொடுக்காது என்றும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.