நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 17ம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெற்ற 19ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறக்கூடிய மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் 268 வாக்கியங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள 1,700 டாஸ்மாக் கடைகள் நாளை அடைக்கப்படுகிறது.
இந்நிலையில், நாமக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்று, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.