தயாரிப்பாளர் அன்புசெழியன் மகள் திருமணம்… ரஜினி கமல் உட்பட திரை பிரபலங்கள் பங்கேற்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் ஆன அன்புசெழியனின் மகள் சுஷ்மிதாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

சன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் சரண் மற்றும் அன்புசெழியன் மகள் சுஷ்மிதாவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததில் இருந்தே கடந்த ஒரு மாதமாக அன்புசெழியன்,
ரஜினிகாந்த்
,
கமல்ஹாசன்
உட்பட சினிமா பிரபலங்கள் பலருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்தார்.

அந்த போட்டோக்கள் நாள் தோறும் வெளியாகி வந்தன. இந்நிலையில் அவர்களின் திருமணம் இன்று காலை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இதில் தமிழ் சினிமா பிரபலங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார், நடிகர் நாசர், அம்மா சிவா, மனோபாலா, மயில்சாமி, இயக்குநர்கள் N.லிங்குசாமி, சுசிகணேசன், சரண், நடிகர் வைபவ், சுப்பு பஞ்சு, ரோகிணி தியேட்டர் பன்னீர் செல்வம் ஆகிய பிரபலங்கள் பங்கேற்றனர்.

இதேபோல் அரசியல் பிரமுகர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு, TTV.தினகரன், SV.சேகர், ராணிபெட் காந்தி, கு. பிச்சாண்டி, V V ராஜன் செல்லப்பா, R B உதயகுமார், வாணதி சீனிவாசன், செல்லூர் ராஜு, SP வேலுமணி, ஜெயக்குமார், LK சுதீஷ், உள்ளிட்டோரும் நேரில் வந்து மணமக்களை ஆசிர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.