தரமான கல்வி, திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்: மோடி| Dinamalar

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் தரமான கல்வியை உலகமயமாக்கல், திறன் மேம்பாடு உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து இணைய கருத்தரங்கு டில்லியில் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று துவக்க உரையாற்றினார். அவரின் உரை:
நம் நாட்டின் இளம் தலைமுறைதான் வருங்காலத் தலைவர்கள். ஆகையால், இளம் தலைமுறையினரை மேம்படுத்துவது இந்தியாவின் எதிர்காலத்தை மேம்படுத்துவதாகும்.

தரமான கல்வியை உலகமயமாக்கல், திறன் மேம்பாடு, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு, இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவைக்கு மத்திய பட்ஜெட் 2022ல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த இந்த பட்ஜெட் உதவும். முன்னெப்போதும் எடுக்காத நடவடிக்கையாக தேசிய டிஜிட்டல் பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இடப் பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியும். டிஜிட்டல் பல்கலைக்கழகங்களை உடனடியாக தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.