சென்னை: போட்டித் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு காலஅட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு காலஅட்டவணையை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டது. அதில் 21 போட்டித் தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியாகும் மாதம், ஒவ்வொரு தேர்வு மூலம் நிரப்பப்படும் காலியிடங்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் மட்டும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தற்போது திருத்தப்பட்ட புதிய தேர்வு காலஅட்டவணையை இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது. அதில்கூடுதலாக, தேர்வு எந்த மாதத்தில்நடத்தப்படும், அதன் முடிவுகள் எந்த மாதம் வெளியிடப்படும். நேர்காணல், கலந்தாய்வு எப்போது நடத்தப்படும் ஆகிய விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
அரசு பணியில் சேர விரும்பும்இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராகவும், தேர்வு முடிவுகள், நேர்காணல், கலந்தாய்வு விவரங்களை அறிவதால் உத்வேகத்துடன் தேர்வுக்கு படிப்பதற்கும் தேர்வு கால அட்டவணை பெரிதும் உதவும்.