திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பரிந்துரை கடிதங்கள் அடிப்படையில் வழங்கப்படும் கட்டண சேவை டிக்கெட்டுகள் விலையை உயர்த்த தேவஸ்தானம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பலர், அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பரிந்துரை கடிதங்களை பெற்று சுப்ரபாதம், தோமாலை சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வாங்கி ஏழுமலையானை வழிபடுகின்றனர்.
இந்நிலையில், வஸ்த்ர அலங்கார சேவைக்கான கட்டணத்தை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்ச ரூபாயாகவும், தோமாலை மற்றும் அர்ச்சனை ஆகிய கட்டண சேவை டிக்கெட்டுகளின் கட்டணத்தை 3,000 ரூபாயாகவும் உயர்த்த திட்டமிடப்படுகிறது.
அதேபோல், விஐபி பிரேக் தரிசன டிக்கெட் கட்டணத்தை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் ஆக உயர்த்துவது பற்றியும் தேவஸ்தான நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.