உலக அளவில் பிரசித்தி பெற்ற
திருமலை
திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெரியளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதுமுள்ள
திருப்பதி
ஏழுமலையான் பக்தர்கள் திருமலையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அதிக கூட்டம் வந்துள்ளதால் நேற்று இலவச டிக்கெட் வாங்கச் சென்றவர்களுக்கு பிப்ரவரி 24 ம் தேதி தேதியிட்ட தரிசன டிக்கெட்கள் வழங்கப்பட்டன. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மூன்று முதல் நான்கு நாள்கள் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகிறது.
முதல்வர் ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு: தூள் தூளான பாஜக பிளான்!
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. அதன்படி திருமலைக்கு வரும் பக்தர்கள் மூன்று முதல் நான்கு நாள்கள் தங்கியிருக்கும் ஏற்பாடுகளோடு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் வரை ஒரு நாளைக்கு30 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்து வந்த நிலையில் தற்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பேர் தரிசனம் செய்துவருகின்றனர்.
பிப்ரவரி 19ஆம் தேதி சனிக்கிழமை தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 41,463. அன்றைய தினம் மட்டும் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 46 லட்சமாக இருந்தது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நிலைமை மோசமடைவதற்குள் அதிகமான பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.