பெங்களூரு, : அரசு நிர்வாகத்தை எளிமையாக்க கர்நாடக நிர்வாக சீர்திருத்த ஆணையம், தன்னுடைய இரண்டு மற்றும் மூன்றாவது அறிக்கையை தாக்கல் செய்துஉள்ளது.கர்நாடக அரசு நிர்வாகத்தை சீர்திருத்துவது குறித்து கர்நாடக நிர்வாக சீர்திருத்த ஆணையம் தன்னுடைய இரண்டு மற்றும் மூன்றாவது அறிக்கையை முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் தாக்கல் செய்துள்ளது.
ஆணைய தலைவரான ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை செயலர் விஜய பாஸ்கர் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.தேவையற்ற செலவுகளை குறைக்க வெளி குத்தகை வழங்குவதில் எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கும் ஒதுக்கீடு இருக்க வேண்டும்; காவல் துறையில் ஏட்டு முதல் சப் – இன்ஸ்பெக்டர் வரையிலான ‘கெஜடட்’ இல்லாத பணிகளின் நேரடி நியமனத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் வழங்க வேண்டும்.இதில் அனைத்து பிரிவினரும் இருக்க வேண்டும்.மத்திய அரசு தன்னுடைய தலைமை செயலகத்தில் எந்த பைலாக இருந்தாலும் நான்கு கட்டத்துக்கு மேல் செல்லக் கூடாது என தீர்மானித்துள்ளது.அதே போல மாநில அரசின் தலைமை செயலகத்திலும் மூன்று அல்லது நான்கு கட்டத்துக்கு மேல் செல்லக் கூடாது.10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளுக்கு மாநகர திட்ட சமிதி உருவாக்கலாம் என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.அறிக்கையை முதல்வர் பரிசீலித்துள்ளார். அதில் சாத்தியம் உள்ள முக்கிய அம்சங்களை நடைமுறைக்கு கொண்டு வருமாறு தலைமை செயலருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
Advertisement