உத்தரப் பிரதேச மாநிலத்தில் உன்னாவ் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தன் காலில் விழுந்த பாஜக நிர்வாகியை தடுத்து நிறுத்தி, அவரின் காலை பிரதமர் மோடி தொட்டு வணங்கியது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், நான்காம் கட்ட தேர்தலுக்காக உன்னாவ் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது பாஜகவின் உத்தரப்பிரதேச தலைவர் ஸ்வதந்த்ரா தேவ் சிங் மற்றும் பாஜகவின் உன்னாவ் மாவட்ட தலைவர் அவதேஷ் கட்டியார் ஆகிய இருவரும் இணைந்து பிரதமர் மோடிக்கு ஒரு ராமர் சிலையை அன்பளிப்பாக வழங்கினார்கள்.
“प्रधानसेवक” pic.twitter.com/8BPL9Xolbe
— Sambit Patra (@sambitswaraj) February 21, 2022
அதன் பின்னர், பாஜக மாவட்ட செயலாளர் அவதேஷ் கட்டியார் திடீரென பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து வணங்கினர், இதை பிரதமர் மோடி உடனடியாக உணர்ந்து கொண்டு அவரை தடுத்து நிறுத்தி அவருக்கு அறிவுரை கூறி, தன் காலில் விழுந்த பாஜக நிர்வாகியின் காலை பிரதமர் மோடியும் தொட்டு வணங்கினர்.
இந்த நிலையில், இது குறித்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது. இந்த விடியோவை பாஜக நிர்வாகி ஒருவர் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு, இந்தியாவின் முதல் சேவகன் என்று குறிப்பிட்டுள்ளார்.