பஜ்ரங் தளத் தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்டதால் கர்நாடகாவில் பதற்றம்.! <!– பஜ்ரங் தளத் தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்டதால் கர்நாடகாவில்… –>

கர்நாடகத்தின் சிவமோகாவில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த இளைஞர் ஹர்சா கொலை தொடர்பாகக் காவல்துறையினருக்குத் துப்புக் கிடைத்துள்ளதால் விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவர் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இளைஞர் ஹர்சாவை நேற்றிரவு ஒரு கும்பல் வெட்டிக் கொன்றதையடுத்துப் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் சிவமோகாவில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் விவகாரத்தின் பின்னணியில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என இந்து இயக்கத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் கூறாய்வுக்குப் பின் ஹர்சாவின் உடல் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டுக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.