புகழ்பெற்ற இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் இளையராஜா

புகழ்பெற்ற இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் இளையராஜா

புகழ்பெற்ற இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் இளையராஜா

2/21/2022 5:48:47 PM

இதுவரை 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளாார் இளையராஜா. திரைப்படம் தவிர்த்து, இசைக்கருவிகளை மட்டுமே கொண்டு உருவாக்கிய மியூசிக்கல் ஆல்பங்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமானது கடந்த 1986ம் ஆண்டு வெளியாகி, இசைக்கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற “How to Name it” ஆல்பம் வயலின், புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகளை  கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில் பத்து தனி தனி இசை தொகுப்புகள் இருந்தன. இந்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கப்போவதா இளையராஜா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: திரைப்படங்கள்லலாம், பாகம் 1, பாகம் 2 , பாகம் 3 என வருவதை பார்க்கிறோம் இல்லையா?.. உதாரனமாக சூப்பர் மேன் 1, சூப்பர் மேன் 2, சூப்பர்மேன் 3-னு போகுது, பேட்மேன் 1, 2,3, 4-னு வரிசையாக வந்து போகுது. எனவே இப்போ இதேபோல மியூசிக்கில் ஏன் வரக்கூடாது அப்படினு ஒரு யோசனை எனக்கு வந்தது. அதனால், உங்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால் How to Name it இரண்டாம் பாகம் சீக்கிரமே வரவிருக்கிறது. என்று அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.