மார்ச் கடைசி.. எல்லோரும் ஆபீஸ்-க்கு கிளம்புங்க.. ஐடி ஊழியர்களுக்குப் பறந்த உத்தரவு..!

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான துறைகள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரும் நிலையில், ஐடி துறையும் தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.

2022ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி துறையில் 4.5 லட்சம் ஊழியர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

20 வருடங்களில் இல்லாத மோசமான நிலை.. ஆனா ஐடி துறையினருக்கு ஜாக்பாட் தான்..!

 வொர்க் பரம் ஹோம்

வொர்க் பரம் ஹோம்

இந்த 50 லட்சம் ஊழியர்களில் தற்போது 90 சதவீதம் பேர் வீட்டில் இருந்தும் சொந்த ஊரில் இருந்தும் பணியாற்றி வரும் நிலையில், மார்ச் மாதத்துடன் அனைத்து ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் பிற துறைகளைக் காட்டிலும் மிகவும் தாமதமாக ஊழியர்களை வொர்க் பர்ம் ஹோம்-ல் அலுவலகத்திற்கு அழைக்கிறது

 ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, காக்னிசென்ட், ஆகிய நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர தயாராகிக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

இதனால் சொந்த ஊரில் இருந்து பணியாற்றும் ஐடி ஊழியர்கள் பணியாற்றும் நகரத்திற்குக் குடும்பத்துடன் படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.

 மார்ச் மாதம் கடைசி
 

மார்ச் மாதம் கடைசி

2 வருடமாக வீட்டில் இருந்து பணியாற்றி வரும் ஐடி ஊழியர்களுக்கு இந்த மாற்றம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், மார்ச் மாதம் டெட்லைன் என்பது எதிர்பார்க்காத ஒன்றாகவே இருந்தது, ஐடி ஊழியர்கள் பெரு நகரங்களுக்குப் படையெடுக்கும் காரணத்தால் பெரு நகரங்களில் நீண்ட காலமாகக் காலியாக இருந்த வீடுகள் அனைத்தும் மக்கள் குடியேறி வருகிறார்கள்.

 விப்ரோ

விப்ரோ

இந்த நிலையில் விப்ரோ நிறுவனம் ஏற்கனவே உயர் மட்ட அதிகாரிகளை அலுவலகத்திற்கு அழைத்துவிட்ட நிலையில், ப்ராஜெக்ட் மேனேஜர்களை மார்ச் 3, 2022 முதல் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது. மேலும் அழைக்கப்படும் ப்ராஜெட் மேனேஜர்கள் அனைவரையும் வாரத்திற்கு 2 நாள் மட்டுமே அலுவலகத்திற்கு வந்தால் போதும் என அறிவித்துள்ளது.

 காக்னிசெக்ட்

காக்னிசெக்ட்

இதைத் தொடர்ந்து காக்னிசெக்ட் இந்தியாவில் இருக்கும் அனைத்து அலுவலகத்தையும் முழுமையாக ஏப்ரல் மாதத்தில் திறக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விருப்பம் உள்ள அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வர அனுமதி கொடுத்துள்ளது காக்னிசென்ட்.

சுதந்திரம்

சுதந்திரம்

இது ஊழியர்களுக்கு முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டாலும், இதன் தொடர்ச்சியாக அடுத்தச் சில வாரங்களில் நிர்வாகப் பணிகளை முடிவு செய்துவிட்டு அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைக்கத் திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இன்போசிஸ்

இன்போசிஸ்

இதைதொடர்ந்து இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் பெரும் பகுதி ஊழியர்களை அடுத்த 3-4 மாதத்தில் படிப்படியாகப் பகுதி பகுதியாக ஊழியர்களை நாட்டின் அனைத்து அலுவலகத்திலும் அழைக்க முடிவு செய்துள்ளது இன்போசிஸ்.

டிசிஎஸ்

டிசிஎஸ்

மேலும் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனம் அதிகப்படியான ஊழியர்களையும் கொண்ட நிறுவனமாகவும் விளங்கும் டிசிஎஸ்-ம் இன்போசிஸ் படிப்படியாக ஊழியர்களை அழைக்க முடிவு செய்துள்ளது.

 வேலை செய்யும் இடம்

வேலை செய்யும் இடம்

மேலும் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு நிரந்தரமாகவும் அல்லது சில காலம் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்து உள்ளது. ஆனால் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகம் இருக்கும் அல்லது ஊழியர்களின் பணியிடம் இருக்கும் நகரத்தில் இருந்து தான் பணியாற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது.

 பெங்களூர், சென்னை

பெங்களூர், சென்னை

இதனால் மார்ச் மாதத்திற்குப் பின்பு பெரும் பகுதி ஊழியர்கள் கட்டாயம் சொந்த ஊரில் இருந்து கிளம்ப வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. ஏற்கனவே மக்கள் பெங்களூர், சென்னைக்குப் படையெடுக்கத் துவங்கியுள்ள நிலையில் பெரு நகரங்களில் வர்த்தகம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

WFH ends: TCS, Infosys, Wipro, cognizant employees back to office by March

WFH ends: TCS, Infosys, Wipro, cognizant employees back to office by March மார்ச் கடைசி.. எல்லோரும் ஆபீஸ்-க்கு கிளம்புங்க.. ஐடி ஊழியர்களுக்குப் பறந்த உத்தரவு..!

Story first published: Monday, February 21, 2022, 18:32 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.