கொரோனா தொற்றுக் காலகட்டத்தில் பல நிறுவனங்கள் வர்த்தகம் மற்றும் வருமானம் இல்லாமல் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தாலும் இன்று முதல் மிகப்பெரிய பேசு பொருளாக இருப்பது அமெரிக்காவில் இருக்கும் ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான பெட்டர்.காம் நிறுவனத்தின் 900 பேரின் பணிநீக்கம் தான்.
ஐடி நிறுவனங்களின் முடிவால் ஐடி ஊழியர்கள் அச்சம்.. விரைவில் பணிநீக்கம் வருமா..?!
பெட்டர்.காம்
பெட்டர்.காம் நிறுவனத்தின் சிஇஓ விஷால் கர்க் ஓரே ஓரு ஜூம் காலில் எவ்விதமான முன் அறிவிப்புமின்றி ஒட்டுமொத்தமாக 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தார். இந்தச் செய்தி அமெரிக்காவை தாண்டி உலக நாடுகளில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.
மீண்டும் பணிநீக்கம்
இதேவேளையில் மெட்டர்.காம் நிறுவனம் தனது நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ள நிலையில், மார்ச் மாதத்தில் மீண்டும் கூடுதலாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.
4 முக்கிய அதிகாரிகள்
இந்தச் சம்பவத்திற்குப் பின்பு பெட்டர்.காம் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையும், விஷால் கர்க் மீதான நம்பிக்கையும் ஊழியர்கள் மத்தியில் குறைந்த காரணத்தால் தற்போது இந்நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் இருக்கும் 4 முக்கிய அதிகாரிகள் அடுத்தடுத்து வெளியேறியுள்ளனர்.
900 ஊழியர்கள் பணிநீக்கம்
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் 900 ஊழியர்கள் பணிநீக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் பணியைத் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனால் பெட்டர்.காம் நிறுவனத்தின் உயர்மட்ட குழு முழுமையாக ஆட்டம் கண்டு உள்ளது. இதனால் நிறுவனத்தின் வளர்ச்சியே கேள்விக்குறியாகி நிற்கிறது.
முக்கிய அதிகாரிகள் யார்
தற்போது பெட்டர்.காம் நிறுவனத்தில் இருந்து கிளேட்டன் கரோல் – பைனான்ஸ் துறையின் துணை தலைவர், பால் டைகர் – கொள்முதல் பிரிவின் பொது மேலாளர், ஸ்டீபன் ரோசன் விற்பனை பிரிவின் தலைவர், கிறிஸ்டியன் வாலஸ் – ரியல் எஸ்டேட் பிரிவின் தலைவர் ஆகிய 4 உயர் அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.
விஷால் கர்க்
இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கும் விதமாக விஷால் கர்க் பணிநீக்கம் செய்யப்பட்ட 900 ஊழியர்களை ஈடு செய்யும் வகையில் 1200க்கும் அதிகமான ஊழியர்களைப் புதிதாகப் பணியில் சேர்த்துள்ளது, இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பெரும் பகுதி ஊழியர்களை இந்தியாவில் சேர்த்துள்ளது.
மக்கள் கருத்து
இதனால் நிறுவனத்தில் பெரும் பகுதி செலவுகளைக் குறைக்கப்படுவது மட்டும் அல்லாமல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. விஷார் கர்க் போன்ற ஒரு சிஇஓ-வை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள், உங்கள் கருத்தை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.
4 senior executives left ahead another round of layoff at Better.com in March 2022
4 senior executives left ahead another round of layoff at Better.com in March 2022 மீண்டும் பணிநீக்கம்.. ஆட்டம்கண்ட அஸ்திவாரம்.. பெட்டர்.காம் விஷால் கர்க் திட்டத்தால் ஊழியர்கள் அதிர்ச்சி..!