வணிகர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி; கொரோனாவால் வருவாய் இழப்பு| Dinamalar

பெங்களூரு : பெங்களூரு மாநகரில் கொரானோ பாதிப்பால், வணிகர்கள் எண்ணிக்கை, 40 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 2021-22 நிதியாண்டுக்கான வணிக உரிமங்களை புதுப்பிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டது. இதில், 62 சதவீதம் நகர வணிகர்கள் மட்டுமே உரிமத்தை புதுப்பித்துள்ளனர்.

உரிமத்தை புதுப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், புதிதாக விண்ணப்பிப்போர் சதவீதம் சராசரியாகவும் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் பதிவு அளித்துள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:நிதியாண்டு, 2019 – 20ல் முந்தைய நிதியாண்டில் மாநகராட்சி நிர்வாகம், 51 ஆயிரத்து, 564 வணிக உரிமங்களை புதிதாகவும், புதுப்பிக்கப்பட்டதாகவும் மொத்தமாக வழங்கியுள்ளது. 2020-21ல் இந்த எண்ணிக்கை குறைந்து 45 ஆயிரத்து, 388 ஆக பதிவானது. இது, 2021-22ல் 37,511ஆக பதிவாகியுள்ளது. பலரும் கொரோனா பாதிப்பால் தொழிலை விட்டு, பணியாளர்களாக மாறிவிட்டனர்.வணிகர்கள் தொழிலை விடுவது குறித்து நேரடியாக மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவிப்பில்லை. சிலர் ஐந்தாண்டுகளுக்கான உரிமம் பெற்றிருப்பர். அவர்களின் பதிவுகளும் ஆண்டு உரிமப்பதிவில் இடம்பெறுவதில்லை.உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் பிப்., இறுதி வரை உள்ளது. அதன் பின், வார்டு வாரியாக வணிக நிறுவனங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிமம் பெறாதவர்கள், புதுப்பிக்காதவர்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும்.இவ்வாறு கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.