நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக
எச் வினோத்
இயக்கத்தில் ‘
வலிமை
‘ படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இதனை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தனது 61 படத்தில் நடிக்கிறார்.
‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
போனி கபூர்
தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், டிரெய்லர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அஜித்தின் லுக் இளமையாக இருப்பதாக பலரும் மோஷன் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
வலிமை’ படம் பிப்ரவரி 24 ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் இந்தப்படம் ரிலீஸ் ஆக உள்ளதுது. அண்மையில் வெளியான திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பும் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ‘வலிமை’ பட வெளியீட்டை திருவிழா போல் கொண்டாட தயாராகி வருகின்றனர் ரசிகர்கள்.
அந்த ஹிட் படம்லாம் நீதான் எடுத்தியா.. ஆர்.கே. செல்வமணியை விளாசிய பாக்யராஜ்..!
இந்நிலையில் இந்த்தப்படம் குறித்து இயக்குனர் எச். வினோத் அளித்த பேட்டி ஒன்றில், “அஜித் சார் என்னிடம், ‘இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். வலிமை படத்தில் நடித்த பிறகு, நான் ஒரு பெருமைக்குரிய மகனாக, என் அம்மா, அப்பா மற்றும் என் குடும்பத்தாருக்கு இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டப் போகிறேன் என்றார். அவர்களுக்கு திரையிட்டு காட்டி, அதற்கு அவர்களின் ரியாக்ஷனை அடிப்படையாக வைத்து தான் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்” என கூறியுள்ளார்.
மேலும், ‘வலிமை’ மற்றொரு அதிரடி படம் அல்ல. இது ஒரு ‘சமூகப் பிரச்சினைகளையும் பேசும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இதில் வரும் குடும்பப் பிரச்சினைகள் குடும்பத்திற்குள் நடக்கும் சம்பவங்களைப் பற்றியதல்ல. ஒரு குடும்பம் சமூகத்திற்குள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றியது. ஆகையால் அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது’ என்று தெரிவித்துள்ளார் வினோத். அவரின் இந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வாழ்க்கைக்கு உகந்த படம் கடைசி விவசாயி; பாராட்டிய மிஷ்கின்