"வலுக்கட்டாயமாக என் கணவரை காவல்துறையினர் இழுத்துச் சென்றனர்" – ஜெயக்குமார் மனைவி பேட்டி

‘காவல்துறையினர் என் கணவரை என்ன செய்யப்போறாங்கன்னு தெரியல’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனைவி பேட்டியளித்துள்ளார்.
திமுக பிரமுகரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள 49ஆவது வார்டில், கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில், நரேஷின் சட்டையை சில அதிமுகவினர் கழற்றினர்.
Former-AIADMK-minister-Jayakumar-arrested
பின்னர் அவரை மேல் ஆடை இன்றி சாலையில் அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ வெளியான நிலையில், நரேஷ் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமார் உள்பட அதிமுகவினர் 40 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜெயக்குமாரின் இல்லத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அங்கிருந்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
image
இதையடுத்து ஜெயக்குமாரின் கைதை கண்டித்து காவல்நிலையத்திற்கு முன்பு அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக பேசிய ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன், ”எனது தந்தை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். வீட்டில் பெண்கள் எல்லாரும் இருந்தனர். அப்போது எந்தவித முன்னறிவிப்புமின்றி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் என் தந்தையை கைது செய்து அழைத்துச்சென்றனர். அதிகாரதுஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர்” என்றார்.
image
இது தொடர்பாக பேசிய ஜெயக்குமாரின் மனைவி, ”எங்க வீட்டு கதவை உடைத்துவிடுவது போல நுழைந்தனர். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வீட்டில் நானும், என் மகனும் தான் இருந்தோம். உங்களை நம்பி நான் அனுப்ப முடியாது என்றேன். முடியாது என்று கூறி வலுக்கட்டாயமாக என் கணவரை காவல்துறையினர் இழுத்துச் சென்றனர். என்ன செய்யப்போகிறார்கள் என தெரியவில்லை. எனக்கு பயமாக இருக்கிறது” என்றார்.
ஜெயக்குமாரின் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக அரசு தன்னுடைய அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் @AIADMKOfficial அமைச்சர் திரு @offiofDJ அவர்களை கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்!

கள்ள ஓட்டு போட்டவர்களை விட்டுவிட்டு அதை தடுக்க முயற்சித்தவரை கைது செய்திருப்பது நகைப்புக்குரியது!
— K.Annamalai (@annamalai_k) February 21, 2022

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.