ஜேர்மன் அரசாங்கம் தனது குடிமக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில் லுஃப்தான்சா திங்கள் முதல் உக்ரைனுக்கு செல்லும் விமானங்களை ஓரளவு நிறுத்த திட்டமிட்டுள்ளது.
“எந்த நேரத்திலும் ஒரு இராணுவ மோதல் நடப்பது சாத்தியம்… நல்ல நேரத்திலேயே நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று ஜேர்மன் மத்திய வெளியுறவு அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தனது பாதுகாப்பு அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜேர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுஃப்தான்சா, பிப்ரவரி இறுதி வரை கியேவ் மற்றும் ஒடெசாவிற்கு வழக்கமான விமான சேவைகளை தடை செய்வதாக அறிவித்தது.
ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்காக மட்டும் சில விமானங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டது.
அதன்பிறகு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று விமானங்களில் மீண்டும் முன்பதிவு செய்யப்படும் என்று நிறுவனம் மேலும் கூறியது.
இருப்பினும், மேற்கு உக்ரைனில் உள்ள Lviv நகரத்திற்கு விமானங்கள் வழக்கமான அடிப்படையில் தொடரும் என்று Lufthansa தெரிவித்துள்ளது .