வெறும் ரூ.10,990க்கு 5000mAh பேட்டரி உடன் மொபைல் வெளியிட்ட Vivo!

இந்தியாவில் 5ஜி மொபைல்களை போன் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டு வரும் வேளையில், விவோ நிறுவனம் தனது குறைந்த விலை 4ஜி மொபைலை சைலண்டாக வெளியிட்டுள்ளது. 3ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடக்க மெமரி, இரட்டை கேமரா, ஆண்ட்ராய்டு 11 Go Edition இயங்குதளம் போன்ற அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

புதிய விவோ போன் 6.51″ அங்குல ஐபிஎஸ் எல்சிடி திரையைக் கொண்டுள்ளது. இது 1600*720 பிக்சல்களைக் கொண்ட முழு அளவு எச்டி+ திரையாகும். மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் உடன் 32ஜிபி உள்ளடக்க மெமரி வழங்கப்பட்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 11 (Go Edition) அடிப்படையிலான Funtouch OS 11.1 ஸ்கின் கொண்டு இயங்குகிறது. இரண்டு 4ஜி சிம் ஆதரவைக் கொண்டுள்ள vivo y15s போனில், கூடுதலாக ஒரு எஸ்டி கார்ட் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

64MP நைட்ஸ்கேப் கேமரா… 120Hz ரெப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே உடன் வெளியான Realme 9 Pro 5G போன்!

விவோ ஒய்15எஸ் கேமரா 2021 (vivo y15s 2021 camera)

இந்த குறைந்த விலை vivo y15s ஸ்மார்ட்போன் இரட்டை பின்புற கேமரா அம்சத்தைக் கொண்டுள்ளது. இதில் 13 மெகாபிக்சல் கொண்ட முதன்மை சென்சாரும், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சாரும் அடங்கும். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற கேமராவை விவோ கொடுத்துள்ளதா என்று கேள்வி எழுப்பினால், அதற்கு பதில் இல்லை என்று தான் இருக்கும். இதே விலையில் நல்ல கேமராக்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சந்தையில் விற்பனைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்பக்கம் செல்பிக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளூடூத் 5.0, வைஃபை ஆதரவினை கொண்டுள்ளது. மேலும் சார்ஜிங் செய்ய மைக்ரோ USB கொடுக்கப்பட்டுள்ளது. இசைப் பிரியர்களுக்காக 3.5mm ஜாக்கையும் விவோவின் மலிவு விலை போன் கொண்டுள்ளது.

Jio Phone 5g: மிகக் குறைந்த விலையில் ஜியோ 5ஜி போன்… ஜியோவின் கனவு நனவாகுமா!

விவோ ஒய்15எஸ் பேட்டரி 2021 (vivo y15s 2021 battery)

இந்த போனில் மிக முக்கியமானதும், சிறப்பம்சமாகவும் பார்க்கப்படுவது பேட்டரி தான். மொத்தம் 5000mAh பேட்டரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் சக்தியூட்டப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 (Go Edition) அடிப்படையிலான இயங்குதளம் என்பதால், குறைந்தளவு சக்தியையே இந்த சிப்செட் பயன்படுத்தும். எனவே, சாதாரண பயன்பாட்டுக்கு இரண்டு நாள்கள் வரை சார்ஜ் போட வேண்டிய அவசியம் இருக்காது. இதில் Reverse Charging ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. 10W சார்ஜிங் ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளது.

Tecno Pova 5G: டெக்னோவின் முதல் 5ஜி போன்… அம்சங்கள் டாப் டக்கர்!

விவோ ஒய்15எஸ் 2021 விலை (vivo y15s 2021 price)

Wave Green, Mystic Blue ஆகிய இரு வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கால் கட்டமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் எடை 179 கிராமாக உள்ளது. இதன் விலை ரூ.10,990ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. வங்கி சலுகைகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை மேலும் குறைந்த விலைக்கு பயனர்களால் வாங்க முடியும்.

விவோ ஒய்15எஸ் 2021 விவரக்குறிப்பு (vivo y15s 2021 specification)

பெயர்விவோ ஒய்15எஸ் 2021அளவு162.96×75.2×8.28 மில்லிமீட்டர்இயங்குதளம்ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்)சிப்செட்மீடியாடெக் ஹீலியோ பி35திரை6.51″ அங்குல முழுஅளவு எச்டி+ தெளிவுதிறன்1600*720 பிக்சல்கள்பின்புற கேமரா13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (f/2.0) + 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் (f/2.4)முன்புற கேமரா8 மெகாபிக்சல் செல்பி (f/2.0)ஸ்லாட்இரண்டு 4ஜி நானே சிம் + 1 எஸ்டி கார்டு (1டிபி வரை)ரேம்3ஜிபிமெமரி32ஜிபிஆதரவுவைஃபை, ப்ளூடூத் 5.0, மைக்ரோ யூஎஸ்பி, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக்சென்சார்அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, கைரேகை, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப்இடங்காட்டிஜிபிஎஸ், BEIDOU, GLONASS, GALILEO, QZSSபேட்டரி5000mAh / 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுநிறங்கள்வேவ் கிரீன், மிஸ்டிக் ப்ளூஎடை179 கிராம்விலை3ஜிபி + 32ஜிபி – ரூ.10,990

5ஜி மொபைல் ரூ.15,000க்கும் கீழ்… இதுல உங்களுக்கு புடிச்சது எது?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.