62 வயதான மூதாட்டியின் துணிச்சலான மலையேற்ற சாகசம்!

பெங்களூர்,
பெங்களூரைச் சேர்ந்த 62 வயதான மூதாட்டி நாகரத்னம்மா மேற்குத் தொடர்ச்சி மலையின் கடினமான சிகரங்களில் மலையேற்றம் செய்துள்ளார். 
விஷ்ணு என்பவரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில்,
 பெங்களூரைச் சேர்ந்த 62 வயதான நாகரத்னம்மா என்ற வயதான மூதாட்டி, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அகஸ்திய கூடம் எனப்படும் சிகரத்தின் உச்சியில் சேலை அணிந்தபடி ஒரு கயிற்றின் உதவியுடன் சிகரத்தில் ஏறுகிறார். 

சக்யாத்ரி மலைத்தொடரில் உள்ள உயரமான மற்றும் கடினமான மலையேற்ற சிகரங்களில் ஒன்று அகஸ்திய கூடம் ஆகும்.  16 பிப்ரவரி 2022 அன்று நாகரத்னம்மா, பெங்களூரில் இருந்து தனது மகன் மற்றும் நண்பர்களுடன் அகஸ்திய கூடத்திற்க்கு மலையேற்றம் செய்ய வந்துள்ளார். இது அவருக்கு கர்நாடகாவிற்கு வெளியே அவரது முதல் பயணம் இதுவாகும்.
திருமணத்திற்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளாக குடும்பப் பொறுப்புகள் இருப்பதால் அவர் பிஸியாக இருந்ததாக வீடியோவின் தலைப்பு கூறுகிறது. இப்போது, அவருடைய குழந்தைகள் வளர்ந்து, செட்டில் ஆகிவிட்டதால், அவள் தன் கனவுகளை பின் தொடரலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த தலைப்பில், “அவருடைய உற்சாகத்தையும் ஆற்றலையும் யாராலும் ஈடுசெய்ய முடியாது. அவர் ஏறுவதைப் பார்த்த அனைவருக்கும் இது மிகவும் ஊக்கமளிக்கும் உற்சாகத்தையும் சிறப்பான அனுபவமாக இருந்தது”. என பதிவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.