ஃபீல்டர் கண்ணத்தில் ஓங்கி அறைந்த பவுலர்! பாக். சூப்பர் லீக் போட்டியில் பரபரப்பு



பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கைக்கு வந்த கேட்ச் சரியாக பிடிக்கவில்லை என ஃபீல்டர் கண்ணத்தில் பவுலர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

2022-ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அலேக்ஸ் ஹேல்ஸ், பால் ஸ்டெர்லிங் ஆகிய வீரர்கள் திடீரென்று விலகியது, ஜேம்ஸ் பால்க்னர் சம்பளம் கொடுக்கவில்லை எனக் கூறியது என பஞ்சம் இல்லாமல் அடுத்தடுத்து சர்ச்சைகள் கிளம்பிவருகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் லாகூர் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹேரிஸ் ரௌஃப், ஃபீல்டர் கம்ரன் குலாமை கண்ணத்தில் ஓங்கி அறைந்த சம்பவம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நேற்று லாகூர் அணிக்கும், பெஷாவர் சல்மி அணிக்கும் இடையில் லீக் போட்டி நடைபெற்றது. இதில் பெஷாவர் சல்மி அணி சூப்பர் ஓவர் முறையில் வென்றது.

இப்போட்டியில் லாகூர் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹேரிஸ் ரௌஃப் வீசிய பந்தை, பேட்ஸ்மேன் ஹஸ்ரதுல்லா ஜாஜை தூக்கி அடித்தார். அதனை ஃபீல்டர் கம்ரான் குலாம் பிடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அதே ஓவரில், மீண்டும் ஜாஜை தூக்கியடிக்க, அதனை மற்றொரு ஃபீல்டரான பாவத் அகமது கேட்ச் பிடித்துவிட்டார்.

தான் தவறவிட்ட கேட்சை மற்றொருவர் பிடித்துவிட்டார் என்ற மகிழ்ச்சியை கொண்டாட பௌலர் ஹேரிஸ் ரௌஃப்பிடம் சென்று கம்ரான் குலாம் வாழ்த்துக் கூறினார்.

அப்போதுதான், கேட்ச் விட்ட கம்ரான் குலாம் கண்ணத்தில் ரௌஃப் பளார் என ஓங்கி அறைந்தார். இது அருகில் இருந்த சக வீரர்களுக்கு சங்கடமானது.

எனினும் கம்ரான் குலாம் சிரித்துக்கொண்டு, அதனை ஜாலியாக எடுத்துக்கொண்டார். கேப்டன் ஷாஹீன் அப்ரீடியும் பவுலரை கண்டிக்காமல் சகஜமாக களைந்து சென்றுவிட்டார்.

[


]

ஆனால் இருவருக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை என நம்பப்படுகிறது. ஏனெனில், ஆட்டத்தின் 17-வது ஓவரின்போது, கம்ரான் குலான் ரன் அவுட் செய்த போது, ரௌஃப் ஓடிவந்து கம்ரானை கட்டிப்பிடித்து வாழ்த்தினார்.

இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.