கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அதிமுக மகளிர் அணி தலைவியைத் தோற்கடித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பேரூராட்சியில் இரண்டாவது வார்டில் அதிமுக மாவட்ட மகளிரணி தலைவியான வழிவிட்டாள் என்பவர் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் மகாலட்சுமி ராஜசேகர் 159 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இங்கு சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகாலட்சுமி ராஜசேகர்
”இரண்டாவது வார்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்துவேன். அங்குள்ள நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பேன். இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் சுகாதாரம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவேன். பேருந்து நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பேன்”
எனத் தெரிவித்துள்ளார்.
முன்பு ஆளும் கட்சியாகவும் தற்போது பிரதான எதிர்க்கட்சியாகவும் இருந்து வரும் அதிமுகவின் பொறுப்பாளர் ஒரு சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளது இந்த பகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.