
'அரபிக் குத்து' பாடலுக்கு ஆட்டம்போட்ட ஜெய் – அம்ரிதா
நடிகர் ஜெய் மற்றும் அம்ரிதா இருவரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சமீபத்தில் பீஸ்ட் படத்தில் அனிருத் இசையில் வெளியான அரபிக் குத்து பாடல் 70 மில்லியன் பார்வைகளை தாண்டி யு-டுயூப்பில் டிரெண்டிகில் இருக்கிறது .
சமந்தா, அனிருத், யாஷிகா போன்ற பல பிரபலங்கள் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெய் மற்றும் அம்ரிதா இருவரும் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அரபிக் குத்து பாடலுக்கு இருவரும் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.