உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடைபெற்றது.
அமெரிக்கா, உக்ரைன் மெக்சிகோ மற்றும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த அவசர கூட்டத்தை ஐ.நா.சபை கூட்டியது. இதில் இந்தியா தரப்பில் அறிக்கை தாக்கல் செய்த ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி திருமூர்த்தி பேசியதாவது:
ரஷியா-உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரிய விஷயம். இது பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை குறைக்கும் திறன் கொண்டவையாகும். அனைத்து தரப்பினரும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிப்பதன் இன்றியமையாத அவசியத்தை நாங்கள் வலுவாக வலியுறுத்துகிறோம்.
மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலமும், ராஜா தந்திர முயற்சிகளை தீவிரப்படுத்துவதன் மூலமும் பரஸ்பர இணக்கமான தீர்வு விரைவில் எட்டப்படுவதை உறுதி செய்ய முடியும்.
பொதுமக்களின் பாதுகாப்பு அவசியம். 20,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மற்றும் குடிமக்கள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளிலும், அதன் எல்லைப் பகுதிகளிலும் வாழ்கின்றனர். இந்தியர்களின் நல்வாழ்வுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.