2020 இல் உலகம் முழுவதும் கொரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதிலிருந்து, உலக நாடுகளில் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு, பொருட்களுக்கான விலையில் கடுமையான ஏற்ற இறக்கம், வேலைவாய்ப்புச் சந்தையில் பெரும் பாதிப்பு, சுற்றுலாத் துறையின் மூலம் கிடைக்கும் வருமானம் சரிவு, வர்த்தகம், உற்பத்தி பாதிப்பு என உலக நாடுகளின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்தக் கடினமான சூழ்நிலையைச் சமாளிக்க உலக நாடுகளின் அரசு எப்போது இல்லாத வகையில் அதிகப்படியான கடனை பெற்றது உள்ளது.
இதனால் வியப்படையும் வகையில் உலக நாடுகளின் கடன் அதிகரித்துள்ளது, குறிப்பாக Debt-to-GDP ratio உச்சத்தைத் தொட்டு உள்ளது. இந்தியாவின் கடன் அளவு எவ்வளவு தெரியுமா..?.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக் காலத்தில் மட்டும் உலக நாடுகளில் சுமார் 97 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கி கணக்கிட்டு உள்ளது. இதன் மூலம் கடந்த 10 வருடம் உலக நாடுகள் வறுமையை ஒழிக்க எடுத்த பல முயற்சிகள், முதலீடுகளும் வீணாகியுள்ளது.
அதிகச் செலவுகள் முதலீடுகள்
கொரோனா காலத்தில் உலக நாடுகளின் அரசுகள் சுகாதாரத்தை மேம்படுத்தவும், வேலையின்மையைச் சமாளிக்கவும், உணவுப் பாதுகாப்பின்மையைக் குறைக்கவும், திவாலாகும் வர்த்தகத்தையும், வர்த்தகத் துறையை உயிர்ப்பிக்க அதிகப்படியான செலவுகளையும், முதலீடுகளையும் செய்ய வேண்டியது கட்டாயமானது.
IMF அமைப்பு
இதனால் கடந்த 50 வருடத்தில் இல்லாத வகையில் உலக நாடுகளின் கடன் அளவு அதிகரித்து என்பது IMF அமைப்புச் சமீபத்தில் வெளியிட்ட உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையிலிருந்து தெரிகிறது.
கடன்-ஜிடிபி விகிதம்
கடன்-ஜிடிபி விகிதம் என்பது ஒரு நாட்டின் மொத்த கடனும் அதன் பொருளாதார உற்பத்தியுடன் ஒப்பிடும் அளவீடு. அதாவது ஒரு நாட்டின் ஒரு வருட உற்பத்தி திறனை விடவும் எவ்வளவு அதிகமாக அல்லது குறைவாகக் கடனை வைத்துள்ளது என்பதை விளக்கும் அளவீடு தான் debt-to-GDP ratio.
இந்த வகையில் இந்தியா-வின் நிலை என்ன தெரியுமா..?
டாப் 10 நாடுகள்
கடன்-ஜிடிபி விகிதம் அதிகம் கொண்ட டாப் 10 நாடுகளில் ஜப்பான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
ஜப்பான்- 257 சதவீதம், சூடான்- 210 சதவீதம், கிரீஸ்- 207 சதவீதம், எத்திரியா- 175 சதவீதம், கேப் வெர்டே- 161 சதவீதம், இத்தாலி- 155 சதவீதம், சுரினாம்- 141 சதவீதம், பார்படாஸ்- 138 சதவீதம், சிங்கப்பூர்- 138 சதவீதம், மாலதீவுகள்- 137 சதவீதம்.
ஜப்பான்
2010ல் சீனா முதல் முறையாகவும், முதல் நாடாகவும் 200 சதவீத கடன்-ஜிடிபி விகிதத்தை அடைந்த நிலையில் 10 வருட இடைவெளியில் 257 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளாவிய கடன் $226 டிரில்லியனை எட்டியது, இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப்பெரிய ஒரு வருட அதிகரிப்பைக் கண்டுள்ளது.
இந்தியா
இந்தியா டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தாக இருந்தாலும், இந்தியாவின் கடன்-ஜிடிபி விகிதம் அக்டோபர் 2021ல் 91 சதவீதமாக உள்ளது. இந்தியாவுக்கு முன்பு பிரேசில், பின்பு ஜோர்டன்-ம் உள்ளது.
முக்கிய நாடுகள்
அமெரிக்கா – 133 சதவீதம், போர்சுகல் 131 சதவீதம், பூட்டான் 123 சதவீதம், கனடா 110 சதவீதம், இலங்கை – 110 சதவீதம், பிரிட்டன் 109 சதவீதம், பாகிஸ்தான் – 83 சதவீதம், ஜெர்மனி – 73 சதவீதம், மலேசியா – 71 சதவீதம், சீனா – 69 சதவீதம் கடன்-ஜிடிபி விகிதத்தைக் கொண்டு உள்ளது.
Global Debt: After Covid Goverment debt increased biggest since World War II
Global Debt: After Covid Goverment debt increased biggest since World War II உலக நாடுகளின் கடன் தாறுமாறாக உயர்வு.. ஜப்பான், அமெரிக்கா படுமோசம்.. அப்போ இந்தியா..!